ஐரோப்பிய லீக்: வென்றது மன்செஸ்டர் யுனைட்டெட்!

Friday, September 30th, 2016

உக்ரேனிய கத்துக்குட்டி அணியான ஸோர்யா லுஹன்ஸ்க்கை தோற்கடித்த மன்செஸ்டர் யுனைட்டெட், யூரோப்பா லீக் குழுவின் இறுதி இடத்திலிருந்து முன்னேறியுள்ளது.

போட்டியின் 65ஆவது நிமிடத்தில் மாற்றுவீரராகக் களமிறக்கப்பட்ட வெய்ன் ரூனி அடித்த பந்தொன்று கோல்கம்பத்தில் பட்டுத் திரும்பி வந்த நிலையில், அதை, ஸல்டான் இப்ராஹிமோவிக் கோலாக்கினார். கடந்த ஐந்து போட்டிகளில், இப்ராஹிமோவிக் பெற்ற முதலாவது கோல் இதுவாகும்.

போட்டியின்போது, 70 சதவீதமான நேரத்தில், மன்செஸ்டர் யுனைட்டெட்டே பந்தைக் கட்டுப்பட்டில் வைத்திருந்தபோதும், மெதுவாகவே யுனைட்டெட் ஆடியிருந்தது.

JS82367852

Related posts: