ஐபோனின் பாதுகாப்பு தொழில்நுட்பத்தனை உடைக்க புதிய வழி!கு எப்.பி.ஐ நீதிமன்றில் அறிவிப்பு

ஆப்பிள் நிறுவன தயாரிப்பான ஐபோனின் பாதுகாப்பு தொழில்நுட்பத்தனை தகர்த்து உள் நுழைவதற்கான புதிய தொழில்நுட்ப வழியை அடையாளம் கண்டுள்ளதாக அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறையான எப்.பி.ஐ தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்காவின் சான்பெர்னாண்டினோவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில், சையத் ரிஸ்வான் ஃபாரூக் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் புலனாய்வின் ஒரு பகுதியாக சையத் ரிஸ்வான் ஃபாரூக்கின் ஐபோனை ஆராய விரும்பிய எப்.பி.ஐ, அதற்கு ஆப்பிள் நிறுவனம் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும், எப்.பி.ஐயினரின் கோரிக்கையினை ஆப்பிள் நிறுவனம் ஏற்க மறுப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் மறுப்பை எதிர்த்து வழக்கு தொடுத்திருக்கும் எப்.பி.ஐ யினர் குறித்த வழக்கின் விசாரணைகளை ஒத்திவைக்குமாறு நீதிமன்றத்தில் கோரியுள்ளனர்.
ஐபோனின் பாதுகாப்பு தொழில்நுட்பத்தினை தகர்ப்பதற்கு ஒரு புதிய வழி இருப்பதாக ஆப்பிள் அல்லாத நிறுவனம் ஒன்று தம்மிடம் தெரிவித்திருப்பதாக எப்.பி.ஐ யினர் நீதி மன்றில் தெரிவித்துள்ளனர்.
எனவே அதனை பரிசோதிப்பதற்கு கால அவகாசம் தேவை எனவும் அது வரைகாலமும் வழக்கு விசாரணைகளை ஒத்திவைக்குமாறு எப்.பி.ஐயினர் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணைகளை ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|