ஐபிஎல் தொடர் – எஞ்சிய போட்டிகள் அமீரகத்தில்!

ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் ஷூக்லா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்து 14 ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள் 4 வீரர்களுக்கு கொரோனா உறுதியானதையடுத்து திகதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இதுவரை மொத்தம் 29 போட்டிகள் முடிந்த நிலையில், எஞ்சியப் போட்டிகள் எப்போது நடைபெறும் என்று எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது.
முன்னதாக கொரோனாவால் நிறுத்தப்பட்ட எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை எப்போது நடத்துவது என பிசிசிஐ இன்று ஆலோசனை நடத்தியது.
அதில் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சியப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
000
Related posts:
திக்கம் வைரவிழா தொடர்: கிண்ணத்தை வென்றது பாசையூர் அன்ரனிஸ்!
உலகக் கோப்பையை வெல்லப்போவது யார்? - முதல் அரையிறுதி இன்று!
இருபது 20 உலகக் கிண்ணம் : முதல் சுற்றில் விளையாட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள இலங்கை!
|
|