ஐபிஎல்லை காப்பாற்றி விட்டேன்: சேவாக்!

Saturday, April 21st, 2018

இந்திய அணியின்  முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், தனது அணியில் கிறிஸ் கெய்லை எடுத்ததன் மூலம் ஐபிஎல்-ஐ காப்பாற்றி விட்டதாக பெருமையாக தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்-யில் நடந்த ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் அணி வீரர் கிறிஸ் கெய்ல் அபாரமாக ஆடி சதமடித்து அசத்தினார்.

ஐபிஎல்-க்கு முன்னர் கிறிஸ் கெய்லின் ஆட்டத்தின் மீது பல விமர்சனங்கள் இருந்தது. அதனால், ஐபிஎல் ஏலத்தின் போது அடிப்படை விலையான 2 கோடிக்கு மட்டுமே பஞ்சாப் அணியால் அவர் வாங்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்றைய போட்டியில் சதமடித்ததன் மூலமாக மீண்டும் தன்னை அதிரடி வீரராக நிலை நிறுத்தியுள்ளார் கிறிஸ் கெய்ல்.

இதுகுறித்து வீரேந்திர சேவாக் கூறுகையில், கிறிஸ் கெய்லை ஏலத்தின் எடுத்ததன் மூலமாக ஐபிஎல்-ஐ நான் காப்பாற்றி விட்டேன் என தெரிவித்துள்ளார்.

சேவாக்கின் இந்த கருத்துக்கு பதிலளித்த கெய்ல் கூறுகையில், ‘என்னை ஏலத்தில் எடுத்ததன் மூலம் சேவாக் ஐபிஎல்-ஐ காப்பாற்றி விட்டதாக நினைக்கிறேன்.

நான் என்னை நிறைய நிரூபிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக அனைவரும் கூறினர். நான் தற்போது எனது பெயருக்கான மரியாதையை நிலைநிறுத்தியுள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

Related posts: