ஐபிஎல்லில் சாதிக்கும் முத்தையா சன் ரைசர்ஸ் ஹைதராபாத் !

Wednesday, April 25th, 2018

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பந்து வீச்சு பயிற்சியாளராக இருப்பவர் இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன்.

இதே போன்று மும்பை அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருப்பவர் இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தனே. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையேயான நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணி நிர்ணயித்த 118 ஓட்டங்களை கூட மும்பை அணியால் எடுக்க முடியாமல் பரிதாபமாக தோல்வியை சந்தித்தது.

இந்த தோல்வியின் மூலம் மும்பை அணி கடைசி இடத்திலும், இந்த வெற்றியின் மூலம் மூன்றாவது இடத்திலும் உள்ளது.இதனால் ஹைதரபாத் அணியின் பயிற்சியாளரான முரளி தனது அணியின் சிறப்பான விளையாட்டைப் பார்த்து நேற்று மிகவும் புகழ்ந்து தள்ளினார்.

ஆனால் அதே சம்யம் நேற்றைய போட்டியின் போது மும்பை அணியின் ஒவ்வொரு விக்கெட்டும் விழும் போது ஒன்றுமே சொல்ல முடியாமல் இருந்தார்.

எது எப்படி இருப்பினும் தற்போதைய நிலைமை வரை ஹைதரபாத் அணி ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதே வேளை மும்பை அணி இனி வரும் அனைத்து போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றை நினைத்து பார்க்க முடியும்.

Related posts: