ஐந்தாவது சதத்தை பெற்றார் குசல் ஜனித் பெரேரா!
Saturday, July 27th, 2019பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் குசல் ஜனித் பெரேராவின் சதத்துடன் இலங்கை அணி 314 ஓட்டங்களை குவித்துள்ளது.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
அதன்படி இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 314 ஓட்டங்களை பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் குசல் பெரேரா 111 ஓட்டங்களையும் அஞ்சலோ மெத்தியூஸ் 48 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
இதன்போது குசல் ஜனித் பெரேரா சர்வதேச போட்டிகளில் தனது ஐந்தாவது சதத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புனே அணியை விட்டு விலகும் டோனி?
கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே அணி வெற்றி!
உலக சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்!
|
|