ஐசிசி பரிந்துரையில் வனிந்து ஹசரங்க!

Thursday, July 6th, 2023

ஜூன் மாதம் ஐசிசியின் மிகவும் திறமையான கிரிக்கெட் வீரருக்கான பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் வீரர்களின் செயல்திறனைக் கணக்கில் கொண்டு, அந்த மாதத்தின் வீரரை ஐசிசி அறிவித்து வருகிறது.

வனிந்து ஹசரங்கவைத் தவிர, சிம்பாப்வே வீரர் சீன் வில்லியம்ஸ் மற்றும் அவுஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் ஆகியோர் ஜூன் மாதத்திற்கான பரிந்துரைகளில் உள்ளனர்.

சிம்பாப்வேயில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் சிறந்த வீரருக்கான பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் வனிந்து சேர்க்கப்பட்டுள்ளார்.

அந்த போட்டித் தொடரில் வனிந்து ஹசரங்க 20 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: