ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார் இந்தியாவின் மிதாலிராஜ்

ஐசிசி ஒரு நாள் போட்டி பேட்டிங்கில், இந்தியாவின் கேப்டன் மிதாலிராஜ் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
ஐசிசி நிர்வாகமானது ஒருநாள் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையை இன்று வெளியிட்டது. இதில் இந்திய கேப்டன் மிதாலிராஜ் 753 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி 725 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தையும், நியூசிலாந்து அணியின் எமி சாட்டெர்த்வைட் 720 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி 652 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். இவருக்கு முன்னதாக 656 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்காவின் மரிஸான்னே கப் முதலிடத்தில் உள்ளார்.
Related posts:
உசைன் போல்ட் ஒய்வு பெறுவது உறுதி!
ICC யின் நடவடிக்கைகள் குறித்து தென் ஆபிரிக்கா வீரர் அதிருப்தி!
பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்க அணி வரலாற்று வெற்றி!
|
|