ஐசிசி குளோபல் லெவல் 03 பயிற்சிநெறி இலங்கையில்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஏற்பாட்டில் இலங்கையில் ஐசிசி குளோபல் லெவல் 3 பயிற்சி நடைபெறுகின்றது.
இதில் 24 பேர் கலந்து கொண்டுள்ள நிலையில், இவர்களுள் 19 பேர் முன்னாள் தேசிய அணியின் வீரர்கள் ஆவர்.
அதன்படி, ரங்கன ஹேரத், தம்மிக்க பிரசாத், சாமர சில்வா, அஜந்த மென்டிஸ், ரவீந்திர புஷ்பகுமார, சமில கமகே, தர்ஷன கமகே, ஜெஹான் முபாரக், கயான் விஜேகோன், சஜீவ டி சில்வா, சஜீவ வீரகோன், நிரோஷன் பண்டாரதிலக, சமன் ஜயந்த, முதுமுதளிகே புஷ்பகுமார, சச்சின் பத்திரன, திலின கண்டம்பி, மலிந்த வர்ணபுர மற்றும் இந்திக டி சரம் ஆகியோரே முன்னாள் வீரர்களாகும்.
ஆறு நாட்கள் கொண்ட குறித்த பயிற்சிநெறி 06 ஆம் திகதி ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆசியாவின் முதலாவது மென்சிவப்பு டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்!
மீண்டும் ரன்கள் குவிப்பேன் - டேவிட் வோர்ணர்!
இலங்கை- மேற்கிந்திய கிரிக்கெட் தொடர்: அணி விபரம் அறிவிப்பு!
|
|