ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா அணி 4 வது இடம்!

Thursday, May 5th, 2016

ஐசிசி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், சிறந்த கிரிக்கெட் அணிகளை தரவரிசைப்படி அவ்வப்போது பட்டியல் வெளியிட்டு வருகிறது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 124 புள்ளிகளுடன் முதலிடத்தை வகிக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் நியூசிலாந்து அணி 113 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி 112 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்திய அணி 109 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இலங்கை (104 புள்ளிகள்) 5 வது இடத்திலும் , இங்கிலாந்து (103) 6 வது இடத்திலும், , வங்கதேசம் (98) 7 வது இடத்திலும். வெஸ்ட் இண்டீஸ் அணி 88 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், பாகிஸ்தான் அணி 87 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும் உள்ளது.

டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப்பட்டியலில்  ஆஸ்திரேலியா அணி முதலிடத்தை பிடித்துள்ளது. இந்திய அணி 2-வது இடத்தை வகிக்கிறது. 20 ஓவர் போட்டிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் நியூசிலாந்து அணி முதலிடத்திலும் இந்திய அணி 2-வது இடத்தையும் வகிக்கிறது

Related posts: