ஏஞ்சலோ மெத்யூஸ் 12 ஆவது சதம் !

Monday, May 16th, 2022

ஏஞ்சலோ மேத்யூஸ் தனது 12 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்று வருகிறது.

போட்டியில் முதலில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடி வரும் நிலையில் இன்றைய நாள் நிறைவின் போது 4 விக்கெட் இழப்பிற்கு 258 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.

போட்டியில் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடி வரும் ஏஞ்சலோ மேத்யூஸ் சற்றுமுன்னர் வரை 114 ஓட்டங்களை பெற்றுள்ளார். இது ஏஞ்சலோ மெத்யூஸின் 12 ஆவது சதமாகும். மறுமுறையில் தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறார்

Related posts: