எல்லே போட்டியில் சுன்னாகம் சிவன் சம்பியன்!

Wednesday, January 17th, 2018

யாழ்.உடுவில் பிரதேச செயலக பதிவுசெய்யப்பட்ட கழகங்களுக்கான எல்லே போட்டியில் சுன்னாகம் சிவன் கழகம் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

2018 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு நிகழ்வுகள் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளன. இப்போட்டியில் உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம பிரிவுகளில் உள்ள விளையாட்டு கழகங்கள் பங்குபற்றியுள்ளன.

இதனடிப்படையில் கடந்த 13 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான எல்லே இறுதிப்போட்டியில் கோட்டைக்காடு ஸ்ரீமுருகன் விளையாட்டு கழகமும் சுன்னாகம் சிவன் விளையாட்டு கழகமும் மோதியுள்ளது. இரு கழகங்களுக்கும் இடையில் இடம்பெற்ற விறுவிறுப்பான போட்டியின் இறுதியில் சுன்னாகம் சிவன் விளையாட்டு கழகம் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

Related posts: