எல்லா வகையிலும் முயற்சி செய்தோம். ஆனால், அவை எங்களுக்கு உதவாமல் போய்விட்டது – இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா மனவருத்தம்!

Monday, November 20th, 2023

இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலியா 6ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

போட்டி முடிவடைந்து பரிசு வழங்கும் நிகழ்வின்போது, இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா கூறியதாவது,

முடிவு நாங்கள் நினைத்த வழியில் இல்லாமல் போனது. இன்று எங்களுக்கு சிறந்ததாக இல்லை. நாங்கள் எல்லா வகையிலும் முயற்சி செய்தோம். ஆனால், அவை எங்களுக்கு உதவாமல் போய்விட்டது.

20 முதல் 30 ஓட்டங்கள் கூடுதலாக எடுத்திருந்தால், அது சிறந்தாக இருந்திருக்கும். விராட் கோலி – கே.எல். ராகுல் ஜோடி நிலைத்து நின்று ஆடியபோது, நாங்கள் 270 முதல் 280 ஓட்டங்களை வரை எதிர்பார்த்தோம். ஆனால், நாங்கள் விக்கெட்டுகளை இழந்துவிட்டோம்.

டிராவிஸ் ஹெட், லபுஷேன் ஆகியோர் சிறப்பான இணைப்பாட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை எங்களிடம் இருந்து முற்றிலுமாக அவர்களுக்குரியதாக்கி விட்டனர்.

சேஸிங் செய்தபோது, ஆடுகளம் துடுப்பாட்டக்காரர்களுக்கு சற்று கூடுதல் சாதகமாக இருந்தது. நான் எந்தவித சாக்குபோக்கும் சொல்ல விரும்பவில்லை. நாங்கள் அதிக ஓட்டங்களை பெறவில்லை. 3 விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தினோம். இன்னும் வீழ்த்திருக்க வேண்டும். ஆனால், அந்த இருவரும் சிறப்பாக விளையாடினர் இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: