எல்கரை போன்று கடுமையாக போராட வேண்டும்: பிளிஸஸ் அறிவுரை!

Saturday, August 5th, 2017

இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், கடந்த போட்டியில் கடுமையாக போராடிய எல்கரை போன்று அனைத்து வீரர்களும் போராட வேண்டும் என அணி வீரர்களுக்கு தென்னாபிரிக்க  அணித்தலைவர் டு பிளிஸஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.

மென்செஸ்டரில் ஆரம்பமாகவுள்ள இப்போட்டி குறித்து நிருபர்களுக்கு விளக்கமளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,“இங்கிலாந்து அணிக்கெதிரான 4வது டெஸ்ட் போட்டியின்போது தென்னாபிரிக்க வீரர்கள் அனைவரும் தங்கள் துடுப்பாட்ட திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். கடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக எல்கர் கடுமையாக போராடினார்.இப்போட்டியில் அவர் 136 ஓட்டங்களைக் குவித்தார். அவரைப் போல் 4வது டெஸ்ட் போட்டியில் அனைத்து தென்னாபிரிக்க வீரர்களும் முழுத் திறமையையும் வெளிப்படுத்தி விளையாட வேண்டும்” என கூறினார்.

நான்கு போட்டிகள் கொண்ட இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள மூன்று போட்டிகளில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளிலும், தென்னாபிரிக்க அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன

Related posts: