என் சாதனையை முறியடிப்பார் கோலி – சங்கா!
Friday, December 8th, 2017
விராட் கோலி தமது சாதனையை 2018ஆம் ஆண்டு முறியடிப்பார் என்று இலங்கையின் முன்னாள் வீரர் குமார சங்கக்கார தெரிவித்துள்ளார்.
தமது டுவிட்டர் பதிவொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஒரு ஆண்டில் அனைத்து போட்டிகளிலும் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்ற சாதனையை குமார சங்கக்கார(2868 -2014 ம் ஆண்டு) கொண்டுள்ளார்.
இந்த ஆண்டு 2818 ஓட்டங்களைப் பெற்ற விராட் கோலியினால், அந்த சாதனையை முறியடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் விராட் கோலி வித்தியாசமான வீரர் என்றும் அவர் தமது சாதனையை அடுத்த ஆண்டே முறியடிப்பார் என்றும் சங்கா குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
தரப்படுத்தலில் முதலிடம் கொக்குவில் சி.சி.சி!
மோசமான வரலாற்று சாதனை
இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்க வெளிநாடு செல்லத் தடை!
|
|