என்னை விலைக்கு வாங்க முடியாது: ஷேன் வோர்ன்!

Friday, June 9th, 2017

என்னை விலைக்கு வாங்க யாராலும் முடியாது என்று செய்தி ஊடகங்களின் கேள்விகளுக்கு ஷேன் வார்னே பதில் கூறி ஷாக் கொடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஆள் தேர்வு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதில், அனில் கும்ப்ளே, வீரேந்திர சேவாக், அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டாம் மூடி உள்ளிட்டோர் போட்டியில் உள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பதவிக்கு அவுஸ்திரேலியாவின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே விண்ணப்பித்திருக்கலாம் என செய்திகள் வெளியாயின.

ஆனால் இந்த தகவலை உடனடியாக மறுத்த ஷேன் வார்னே, தமது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளார்.

அதில், ‘இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக, என்னைப் பலரும் கேட்கிறார்கள்.

நான் ஒரு போதும் அதுபற்றி சிந்திக்கவில்லை. விராட் கோஹ்லி எனது நல்ல நண்பர். அவருக்கும், எனக்கும் நல்ல புரிந்துணர்வு உள்ளது. இருந்தாலும், இந்திய அணியின் பயிற்சியாளராக நான் செயல்பட விரும்பவில்லை.

நான் மிகவும் விலை உயர்ந்தவன். என்னை அவர்களால் விலைக்கு வாங்க முடியாது என ஷேன் வார்னே குறிப்பிட்டுள்ளார்.

Related posts: