என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம் – மெஸ்ஸி!

உலகின் சிறந்த கால்பந்தாட்ட வீரரான மெஸ்ஸி, தனது உடல்நலம் குறித்த தவலை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
வெனிசூலா அணிக்கு எதிரான உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் தகுதிச்சுற்று ஆட்டத்திலிருந்து அர்ஜென்டீனா நட்சத்திர வீரர் மெஸ்ஸி விலகினார். இது தொடர்பாக அர்ஜென்டீனா பயிற்சியாளர் எட்கார்டோ பெளஸா கூறுகையில், “துரதிருஷ்டவசமாக மெஸ்ஸியால் இந்த ஆட்டத்தில் விளையாட முடியாமல் போய்விட்டது. அவரது இடது கால் தசையில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
அவருடைய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க விரும்புகிறோம். அவருடைய காயம் குறித்து மருத்துவரிடம் கலந்தாலோசித்தோம். அவரை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்வது முக்கியமானது’ என்றார்.இந்நிலையில், மெஸ்ஸி தனது உடல்நலம் குறித்து அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், எல்லாம் நன்றாக உள்ளது, பிசியோ சிகிச்சைக்கு பின்னர், நான் மெதுவாக பழைய நிலைக்கு திரும்பி விடுவேன், இது பற்றி கவலைப்பட வேண்டாம். உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி என கூறியுள்ளார்.
Related posts:
|
|