எதிர்வரும் 19 ஆம் திகதி காற்பந்து சம்மேளனத்தின் தேர்தலுக்கான வேட்பு மனு கோரல்!

Tuesday, August 15th, 2023

இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் தேர்தலுக்கான வேட்பு மனு கோரல் எதிர்வரும் 19ம் திகதி இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான தீர்மானம் நேற்று கூடிய விசேட மகா சபைக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் தேர்தல் அடுத்த மாதம் 29 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.

இதற்கான வழிகாட்டுதல்கள் சர்வதேச காற்பந்து சம்மேளனத்தினால் முன்னதாக வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: