ஊழல் தடுப்பு விதிகளை மீறிய குற்றத்திற்காக மார்லன் சமுவேல்ஸிற்கு 6 வருட போட்டித் தடை!
Thursday, November 23rd, 2023மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான மார்லன் சமுவேல்ஸிற்கு 6 வருட போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு விதிகளை மீறிய குற்றத்திற்காக அவருக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்லன் சமுவேல்ஸ் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 71 டெஸ்ட், 207 ஒருநாள் மற்றும் 67 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அத்துடன், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 11,314 ஒட்டங்களை மேற்கிந்திய தீவுகள் அணிக்காக பெற்றுக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சங்கக்காராவின் சாதனையை தாண்டுவாரா குஷால் மெண்டிஸ்!
தேசியமட்டப் பளுதூக்கல் - வடக்குக்கு 9 பதக்கங்கள்!
ஐ.சி.சியிலிருந்து சிம்பாப்வே கிரிக்கெட் அணி இடைநீக்கம்!
|
|