ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இந்திய கிரிக்கட் வீரர்!

ஊக்கமருந்து சோதனையில் இந்திய கிரிக்கட் வீரர் ஒருவர் தோல்வி கண்டுள்ளார் என உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு வெளியிட்டுள்ள 2016ஆம் ஆண்டுக்கான அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
138 இந்திய வீரர்கள் அந்த அமைப்பினால் ஊக்கமருந்து பாவனைக்கான சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்
அவர்களில் ஒருவர் ஊக்க மருந்துகளை பாவித்துள்ளமை தெரியவந்துள்ள போதும், அவரது பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை. அத்துடன் அவர் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்றவரா? இல்லையா? என்பது குறித்த விபரங்களையும் வெளியாக்கவில்லை.
இதற்கு முன்னர், இந்தியாவின் 19 வயதுக்கு உட்பட்ட அணியின் வீரரான பிரதீப் சங்வான் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கோஹ்லி டக்அவுட் : சுருண்டது இந்தியா!
கட்டார் தொடர்பிலான செய்தி போலியானது!
உலக கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா காலமானார் – உலகெங்கிலுமிருந்து மரடோனா மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்ப...
|
|