உஷ்மான் கவாஜாவின் அபார துடுப்பாட்டத்தால் முன்னிலையில் ஆஸி!

Sunday, January 7th, 2018

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணி இதுவரையில் 4 விக்கட்டுகளை இழந்து 479 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்த போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய உஷ்மான் கவாஜா 171 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழக்க, அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 83 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

தற்போது துடுப்பெடுத்தாடி வரும் மார்ஷ் சகோதரர்களான ஷோர் மார்ஷ் 98 ஓட்டங்களையும், மிச்சல் மார்ஷ் 63 ஓட்டங்களையும் பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.இங்கிலாந்து அணி சார்பில் அண்டர்சன், புரோட்,மொஜின் அலி மற்றும் கிரேன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 346 ஓட்டங்களை பெற்றது. இதில் ரூட் 83 ஓட்டங்களையும்,டேவிட் மாலன் 62 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, அவுஸ்திரேலிய அணிசார்பில் கம்மின்ஸ் 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இதுவரையில் அவுஸ்திரேலிய அணி, இங்கிலாந்து அணியை விட 133 ஓட்டங்கள் முன்னிலையில் துடுப்பெடுத்தாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இரண்டு நாட்கள் மீதமாகவுள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பு கைநழுவியுள்ளது.

Related posts: