உலக T-20 தர வரிசையில் முதல் தடவையாக நியூசிலாந்து முதலிடம்!!

Friday, May 6th, 2016
உலக டுவன்ரி20 தர வரிசையில் முதல் தடவையாக நியூசிலாந்து அணி முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் வருடாந்த தர வரிசைப்படுத்தலில் முதல் தடவையாக நியூசிலாந்து அணி இந்த மைல் கல்லை எட்டியுள்ளது.
2012-2013ம் ஆண்டுக்கான பெறுபேறுகளின் அடிப்படையிலேயே தரவரிசை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் உலக சாம்பியன் பட்டம் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி மூன்றாம் இடத்தையே பிடித்துள்ளது.
132 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதலாம் இடத்தில் திகழ்கின்றது. இரண்டாம் இடத்தை இந்தியா வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: