உலக 11பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் அனுப்ப திட்டம் – ஐ.சி.சி!

Monday, June 26th, 2017

பயங்கரவாத தாக்குதலின் காரணமாக பாகிஸ்தான் சென்று விளையாட சர்வதேச கிரிக்கெற் அணிகள் தயக்கம் காட்டி வருகின்ற நிலையில் இந்த அச்சத்தை போக்கும் வகையில் உலக 11பேர் கொண்ட அணியை  பாகிஸ்தான் அனுப்ப சர்வதேச கிரிக்கெட் சபைதீர்மானித்துள்ளது.

இதன்படி பாகிஸ்தான் செல்லும் உலக 11பேர் கொண்ட அணிஇ எதிர்வரும் செப்டம்பர் மாதம் மூன்று ரி-ருவென்ரி போட்டிகளில் விளையாடும் என ஐ.சி.சி உறுதியளித்துள்ளது. இதற்கான உலக 11பேர் கொண்ட அணி வெகு விரைவில் அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

பாகிஸ்தானின் லாகூர் நகரில் வைத்து கடந்த கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏழுவர் உயிரிழந்ததோடுஇ ஏழு இலங்கை வீரர்கள் உட்பட 20 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: