உலக பூப்பந்து இறுதி சுற்று போட்டி இன்று ஆரம்பம்!

முதல் நிலை 8 வீர, வீராங்கனைகள் பங்கேற்கும் உலக பூப்பந்து இறுதி சுற்று போட்டி இன்று சீனாவில் ஆரம்பமாகிறது.
ஆண்டுதோறும் 8 முதல் தர வீர, வீராங்கனைகள் மாத்திரம் கலந்து கொள்ளும் உலக பூப்பந்து இறுதி சுற்று போட்டி இடம்பெறுகிறது.
இந்த வருடத்திற்கான உலக பூப்பந்து இறுதி சுற்று போட்டி சீனாவின், குவாங்சோவ் நகரில் இன்று முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
போட்டியில் பங்கேற்கும் வீர, வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் பிரிவில் உள்ள எதிர்போட்டியாளருடன் தலா ஒரு முறை விளையாட வேண்டும்.
முதல் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் அரை இறுதிக்கு முன்னேறுவர்.
Related posts:
வர்ணனையாளராகும் சங்கக்கார!
இன்று ஆரம்பமாகிறது இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ரெஸ்ட் போட்டி !
இரு வாரம் மத்தியூஸ் அவுட்_ பங்களாதேஸ் தொடரில் இணைவாரா
|
|