உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் – ஐசிசியின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

Tuesday, July 30th, 2019

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் 9 அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ஐ.சி.சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையில் மட்டுமே டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், டெஸ்ட் விளையாடும் அணிகளுக்கு இடையே மட்டும் கால்பந்து லீக் தொடரை போன்று நடத்த ஐ.சி.சி முடிவு செய்தது.

இதற்கான வேலைகள் அனைத்தும் நடந்து வந்தது. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ஐ.சி.சி அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த தொடரில் ஒவ்வொரு டெஸ்ட் விளையாடும் அணியும், மற்ற அணிகளுடன் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும்.

இறுதியில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், கோப்பைக்கான இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். வரும் 2021ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இறுதிப் போட்டி நடைபெறும் என்று ஐ.சி.சி அறிவித்துள்ளது.

மொத்தம் 27 தொடர்களில் 71 போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் அங்கீகாரம் பெற்ற அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 9 நாடுகள் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடுகின்றன.

Related posts: