உலக சாம்பியன் குத்துச் சண்டை போட்டியில் ஜெப் ஹோர்ன் வெற்றி

Tuesday, July 4th, 2017

வெல்டர் வெயிட் உலக சாம்பியன் குத்துச் சண்டை போட்டியில் ஜெப் ஹோர்ன் வெற்றிபெற்றுள்ளார்இந்த குத்துச்சண்டை போட்டி பிரிஸ்பேனில் நேற்று நடைபெற்றது.

இதில் பிலிப்பைன்ஸ் நாட்டின் பிரபல குத்துச்சண்டை வீரரான மானி பக்வாயோவும், ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஜெப் ஹார்னும் மோதினர்

குத்துச்சண்டை போட்டிகளில் பல பட்டங்களை வென்ற பக்வாயோ இப்போட்டியில் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்ததுஎனினும், 117-111, 115- 113, 115-113 என்ற புள்ளிக் கணக்கில் பக்வாயோவை வென்று ஜெப் ஹார்ன், சாம்பியன் பட்டத்தை வென்றார்

இருப்பினும் இப்போட்டியில் பக்வாயோ தோற்றதற்கு நடுவர்களின் தவறான தீர்ப்பே காரணம் என்று அவரது தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்

Related posts: