உலக சாதனை படைப்பாரா ரோஹித் சர்மா!
Sunday, February 24th, 2019சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்கிற சாதனையை மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் அண்மையில் நிகழ்த்தினார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் மெக்கல்லம் 107 சிக்ஸருடன் முதல் இடத்திலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அஃப்ரிடி 351 சிக்ஸருடன் முதல் இடத்திலும் டி20 கிரிக்கெட்டில் 103 சிக்ஸருடன் கெயில் முதல் இடத்திலும் உள்ளார்கள் (கப்திலும் 103 சிக்ஸர் அடித்துள்ளார்).
டி20 கிரிக்கெட்டில் 52 இன்னிங்ஸில் 103 சிக்ஸர் அடித்துள்ளார் கெயில். மேலும் கெய்ல் மற்றும் கப்திலின் 103 சிக்ஸர்களுக்கு அடுத்ததாக ரோஹித் சர்மா 102 சிக்ஸருடன் (85 இன்னிங்ஸ்) உள்ளார். இதையடுத்து இன்னும் 2 சிக்ஸர் அடித்தால் அதிக சிக்ஸர் அடித்த டி20 வீரர் என்கிற பெருமையை அவர் அடைவார்.
விசாகப்பட்டினத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மா உலக சாதனை படைப்பாரா என்கிற ஆர்வம் எழுந்துள்ளது.
Related posts:
|
|