உலக சாதனை படைத்த குத்துச் சண்டை வீரர்!

Monday, August 28th, 2017

அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மேவெதர் தொடர்ந்து 50 வெற்றிகளை பதிவு செய்து உலகசாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் நகரில் தொழில்முறை சார்ந்த குத்துச்சண்டைப்போட்டி நடைபெற்றது. இதில் அயர்லாந்தைச் சேர்ந்த மெக் கிரிகோரும், அமெரிக்காவைச் சேர்ந்த மேவெதரும் மோதினர்.

இப்போட்டியின் முதன் மூன்று சுற்றுகளில் தடுப்பு ஆட்டத்தை வெளிப்படுத்திய கேவெதர், அதன் பின்னர் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் நிலைகுலைந்து போன மெக் கிரிகோர் ஆட்டத்தின் 10-வது சுற்றில் தோல்வியை தழுவினார்.

இந்த வெற்றியின் மூலம் மேவெதர், தொழில்முறை ஆட்டங்களில் தோல்வியே தழுவாமல் தொடர்ச்சியாக 50-வது வெற்றிகளை பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார்.இதன் மூலம் சகநாட்டைச் சேர்ந்த முன்னாள் குத்துச்சண்டை வீரர் ராக்கி மார்சியானோவின் சாதனையை மேவெதர் முறியடித்துள்ளார்.மேலும் இந்த வெற்றியின் மூலம் மேவெதருக்கு பரிசுத்தொகையாக சுமார் 600 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

Related posts: