உலக சாதனையை  நெருங்கிய ஆப்கானிஸ்தான் வீரர்! 

Sunday, March 25th, 2018

சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் 100 விக்கட்டுக்களை விரைவாக பெற்றவர் என்ற சாதனையை நிலைநாட்ட ஆப்கானிஸ்தான் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரஷிட் கான் நெருங்கிக்கொண்டிருக்கின்றார்.

இதுவரை 42 போட்டிகளில் 99 விக்கட்டுக்களை அவர் கைப்பற்றியுள்ளார். ஒரு விக்கட்டை கைப்பற்றினால், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் குறைந்த போட்டிகளில் 100 விக்கட்டுக்களைப்பெற்றவர் என்ற சாதனைக்கு ரஷிட் கான் சொந்தக்காரர் ஆவார்

ஹராஹரேயில் அயர்லாந்துடன் இடம்பெற்ற போட்டியில் 40 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை அவர் வீழ்த்தினார்.

தற்போதைய சாதனையாக அவுஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க் 52 போட்டிகளில் 100 விக்கட்டுக்களை கைப்பறியமையே உள்ளது.

அவருக்கு அடுத்தபடியாக, பாகிஸ்தானின் சக்லியன் முஸ்டாக் 53 போட்டிகளிலும், நியூஸிலாந்தின் ஷேன் பொன்ட் 54 போட்டிகளிலும், அவுஸ்திரேலியாவின் பிரெட் லீ 55 போட்டிகளிலும் 100விக்கட்டுக்களை கைப்பற்றி உள்ளனர்.

மேலும் இந்திய அணியின் இர்பான் பதான் 59 போட்டிகளில் 100 விக்கட்டுகளை கைப்பற்றி பட்டியலில் 9 ஆம் இடத்திலும், இலங்கை அணியின் அஜந்த மெண்டிஸ் 63 போட்டிகளில் குறித்தஇலக்கை அடைந்து 19 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: