உலக சாதனைகள் இரண்டை நிறைவேற்ற மாலிங்கவுக்கு வாய்ப்பு

Monday, February 11th, 2019

எதிர்வரும் மார்ச் மாதம் தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க 06 விக்கெட்களை வீழ்த்தினால், சர்வதேச இருபதுக்கு – 20 கிரிக்கெட் மைதானத்தில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனைக்கு ஆளாகவுள்ளார்.

அதன்படி, இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டிகள் 70 இல் விளையாடி, 94 விக்கெட்களை கைப்பற்றி விக்கெட்களை வீழ்த்திய பட்டியலில் இரண்டாவது இடத்தில் மாலிங்க உள்ளதோடு, பாகிஸ்தான் முன்னாள் வீரரான ஷஹீட் அப்ரிடி 96 போட்டிகளில் 98 விக்கெட்களை வீழ்த்தி முன்னிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையே இருபதுக்கு -20 போட்டிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 19-22-24 ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளது.

Related posts: