உலக கிண்ண ஹொக்கி போட்டிகள் ஆரம்பம்!

14 ஆவது உலக கிண்ண ஹொக்கி போட்டிகள் இந்தியாவின் – ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வரில் இன்று ஆரம்பமாகிறது.
16 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
இறுதியாக கடந்த 2014 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் நடைபெற்ற இந்த போட்டியில் அவுஸ்திரேலியா அணி கிண்ணத்தை வென்றது.
இந்தமுறை, அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய அணிகள் ஏ பிரிவிலும், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, சீனா அகிய அணிகள் பி பிரிவிலும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன், சீ பிரிவில் பெல்ஜியம், இந்தியா, கனடா, தென்னாபிரிக்கா அணிகளும், ‘டி’ பிரிவில் நெதர்லாந்து, ஜெர்மனி, மலேசியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.
இன்றைய முதல் போட்டியில், குழு ‘சீ’ அணிகளான இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன.
இந்த உலக கிண்ண ஹொக்கி போட்டிகள் கடந்த 1971ம் ஆண்டு முதன் முதலில் ஸ்பெயினில் இடம்பெற்றிருந்த நிலையில், அதில் பாகிஸ்தான் அணி கிண்ணத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|