உலக கிண்ண கிரிக்கெற் தொடர் – பங்களாதேஸ் அணிக்கு எதிரான போட்டியில், தென்னாப்பிரிக்க அணி 149 ஓட்டங்களால் வெற்றி!

Wednesday, October 25th, 2023

உலக கிண்ண கிரிக்கட் தொடரின் பங்களாதேஸ் அணிக்கு எதிரான போட்டியில், தென்னாப்பிரிக்க அணி 149 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

வான்கடே மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில், அந்த அணி 5 விக்கட்டுக்களை இழந்து 382 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

383 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய பங்களாதேஸ் அணி 46.4 ஓவர்கள் நிறைவில், சகல விக்கட்டுக்களையும் இழந்து 233 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்துள்ளது.

Related posts: