உலக கிண்ணம் பிற்போடப்பட்டால் ஆஸி வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பர் – டேவிட் வோர்னர்!

Tuesday, June 23rd, 2020

இருபதுக்கு 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கட் போட்டி பிற்போடப்பட்டால் அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பார்கள் என அந்த அணியின் வீரர் டேவிட் வோர்னர் தெரிவித்துள்ளார்

20 ஓவர் உலக கிண்ண கிரிக்கட் தொடரை பிற்போடுவது குறித்து பல்வேறு விதங்களில் கலந்துரையாடப்பட்டு வருகிறது.

உலக கிண்ண போட்டியில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு அணியையும் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வந்து பின்னர் அவர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துவது என்பதெல்லாம் மிகவும் சவாலான விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமின்றி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அவுஸ்திரேலியாவில் தற்போது பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளன. இந்த விதிமுறைகளை பின்பற்றியாக வேண்டும் என்பதால் உலக கிண்ணம் குறித்து சர்வதேச கிரிக்கட் பேரவை எடுக்கும் தீர்மானத்திற்காக காத்திருக்கிறோம்.

இந்தநிலையில் ஏலத்தில் எடுக்கப்பட்ட அவுஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் ஐ.பி.எல். போட்டியில் விளையாட ஆர்வமுடன் உள்ளனர்.

அவுஸ்திரேலிய கிரிக்கட் சபை அனுமதித்தால் எல்லா வீரர்களும் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கபார்கள் என அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் வீரர் டேவிட் வோர்னர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: