உலக கிண்ணம் – கோலுக்காக 63 கி.மீ. ஓடிய வீரர்!

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி 4:2 என்ற கோல் கணக்கில் குரேஷியாவை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது. இந்தாண்டு உலகக் கிண்ணத் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரருக்கு கொடுக்கப்படும் மிக உயரிய விருதான தங்கப் பந்து(கோல்டன் பால்) விருது குரேஷியாவின் லூகா மோட்ரிச்க்கு வழங்கப்பட்டது.
குரேஷியாவின் வெற்றிக்கு இவர் ஆரம்பத்தில் இருந்து சிறப்பாக பங்காற்றினார். லூகா மோட்ரிச் நடுகள (மிட் பீல்ட்) பகுதியில் முதுகெலும்பாக திகழ்ந்தார். இவரைத் தாண்டி பந்தைக் கடத்திச் செல்வது கடினம். அதேபோல் அவர் கையில் பந்து கிடைத்தால் புயல் வேகத்தில் பந்தை எதிரணி கோல் எல்லைக்குள் கொண்டு சென்று விடுவார்.
லூகா மோட்ரிச் பந்தை கடத்துவதற்காக 63 கிலோமீற்றர் தூரம் ஓடியுள்ளார். ஒரு போட்டிக்கு சாராசரியாக 10.5 கிலோமீற்றர் ஓடியுள்ளார். இதுதான் அதிகபட்ச தூரமாக உள்ளது.
இந்த ஆண்டிற்கான கால்பந்து போட்டியில் மிக உயரிய விருதான கோல்டன் பால் விருதினை தட்டிச் சென்றுள்ளதன் மூலம் புது நாயகனாக உருவெடுத்துள்ளார்.
பிரேசிலில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் இவ் விருது ஆர்ஜென்ரீனாவின் லயோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது.
கோல்டன் பால் விருதை வென்றதன் மூலம் கால்பந்தாட்ட உலகில் மெஸ்ஸி, ரொனால்டோ வரிசையில் லூகா ஒரு புதிய கதாநாயகனாக உருவெடுத்துள்ளார்.
Related posts:
|
|