உலக அணிக்கு எதிரான டி20 போட்டி… சங்ககாரா, ஜயவர்த்தனாவின் முடிவு வெளியானது
Monday, August 14th, 2017
உலக அணி, இலங்கை அணிக்கு இடையேயான டி20 போட்டியில் இலங்கை முன்னாள் நட்சத்திரங்களான சங்ககாரா மற்றும் மஹேல ஜயவர்த்தன ஆகியோர் கலந்து கொள்ளமாட்டர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு நிவாரணங்களை வழங்க உதவிகளை பெறும் நோக்கில் உலக அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையே டி20 போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கிரிக்கெட் போட்டி செம்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில் இலங்கை அணியுடன், உலக அணியிலும், தற்போதைய வீரர்களுடன் அந்த அணியை பிரதிநிதித்துப்படுத்தும் வீரர்களும் விளையாடவுள்ளனர்.
இந்தியா உள்ளிட்ட உலக அணியில் பிரதிநிதித்துப்படுத்தும் ஏனைய 7 நாடுகளின் வீரர்களும் போட்டியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பாக்கப்படுகின்றது.
இதில் இலங்கை முன்னாள் நட்சத்திர வீரர் திலகரத்னே தில்சன் கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும் வெளிநாட்டு போட்டிகள் காரணமாக இந்த போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான குமார் சங்ககார மற்றும் மஹேல ஜயவர்த்தன ஆகியோர் கலந்து கொள்ளமாட்டார்கள் என தெரியவந்துள்ளது.
Related posts:
|
|