உலகில் பிரபல வீரர்களது பட்டியலினை வெளியிட்டது ESPN இணையத்தளம்!

Thursday, June 1st, 2017

உலகில் பிரபலமான வீரர்களது பட்டியலினை உலகின் முதல்தர கிரிக்கெட் இணையத்தளமான ESPN இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

குறித்த பட்டியலின் படி, முதலிடத்தினை போர்த்துக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தட்டிச் சென்றுள்ளார்.

2ம் இடம் அமெரிக்காவின் கூடைப்பந்து வீரர் லீப்ரோன் ஜேம்ஸ் இற்கும், 3வது இடம் ஆர்ஜன்டினா கால்பந்து வீரர் லயனல் மெஸ்ஸி’ற்கும் 4வது இடம் சுவிசர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் இற்கும் கிடைக்கப் பெற்றுள்ளது.

உலகின் அதிவேக மனிதனாக கணிக்கப்படும் ஜெமைக்காவின் உசேன் போல்ட் 07ம் இடத்தினையும், உலகிலேயே சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் சில வீரர்களே இருக்கின்ற நிலையில், அதில் பெரும்பாலும் இந்திய வீரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளுக்காக விராட் கோஹ்லி குறித்த பட்டியலில் 13ம் இடத்திலும் இருக்கின்ற நிலையில்; இலங்கை அணி சார்பில் எவரும் முதல் 100 இடங்களில் உள்வாங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: