உலகமே திரும்பி பார்க்க வைத்துள்ள கிரிஸ் கெய்லின் வழக்கு!

Friday, October 27th, 2017

பிரபல கிரிக்கட் வீரர் கிரிஸ் கெய்ல் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் பலரது அவதானம் திரும்பியுள்ளது. ஓய்வறைகளுக்கான பணி பெண்ணிடம் தனது பிறப்பு உறுப்பை காட்டியதாக கிரிஸ் கெய்ல் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் அவுஸ்திரேலிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருந்த நிலையில் கிரிஸ கெய்ல் அந்த பத்திரிக்கைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்திருந்தார்.

இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.தான் ஓய்வறைக்கு சென்ற போது கிரிஸ் கெய்ல் தனது பிறப்புறுப்பை காட்டியதாக அந்த பணி பெண் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வறைக்கு வந்த பெண்ணிடம் என்ன தேடுகிறாய் என கிரிஸ் கெய்ல் அந்த பெண்ணிடம் வினவியுள்ளார். தான் துடைப்பானை (டவல்) தேடுவதாக பதில் வழங்கியுள்ளார்.இதன்போது கிரிஸ் கெய்ல் தான் அணிந்திருந்த துடைப்பானை (டவல்) அகற்றி தன்னிடம் பிறப்புறுப்பை காட்டியதாக அந்த பெண் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் 2015 ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டிக்கு இடையே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை என்.எஸ.டபிள்யூ உச்ச நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது.இந்த வழக்கின் சாட்களின் பதிவு இன்றுடன் நிறைவுபெற்றுள்ளது.

Related posts: