உலகக் கோப்பையை வெல்லப்போவது யார்? – முதல் அரையிறுதி இன்று!
Tuesday, July 10th, 201821 ஆவது பிஃபா உலகக் கோப்பை ஜூன் 14 ஆம் திகதி முதல் தொடங்கி ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. 32 நாடுகள் பங்கேற்ற போட்டியில் 16 நாடுகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
இதில் 8 அணிகள் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறி, பின்பு பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றன.
காலிறுதியில் பிரான்ஸ் அணி உருகுவேயையும், பெல்ஜியம் பிரேஸில் அணியையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின.
இந்நிலையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று இரவு நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பிரான்ஸ் – பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.
காலிறுதியில் பிரான்ஸ் அணி உருகுவேயையும், பெல்ஜியம் பிரேஸில் அணியையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின. இப்போது இரண்டாவது முறையாக உலகக்கோப்பை அரையிறுதிக்கு பெல்ஜியம் முன்னேறியுள்ளது.
இளம் வீரர்கள் அதிகம் கொண்டுள்ள பிரான்ஸ் அணியில் 19 வயதான மாப்பே, பவேர்ட், லுகாஸ் ஆகியோர் சிறந்த வீரர்களாக கருதப்படுகிறார்கள்.
பெல்ஜியம் அணியிலும் கோல் கீப்பர் சிறப்பாக விளையாடுகிறார். இரு அணிகளும் சிறந்த அணிகளாக இருப்பதால் ரசிர்கள் மத்தியில பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Related posts:
|
|