உலகக் கிண்ண போட்டிகளில் பாகிஸ்தான் அல்லது இந்தியா பங்கேற்கத் தடை!

Friday, February 22nd, 2019

உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானை நீக்குவது அல்லது இந்தியா அணியானது விலகுவது என, தீர்மானிக்கும் கடிதம் ஒன்றினை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் முன்னிலைப்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.சி.சி இற்கு கடிதம் அனுப்புவது தொடர்பில் இன்று(22) இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே அண்மையில் காஷ்மீர் – புல்வாமா பகுதியில் இந்திய இராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பொன்று குண்டு வீசியதில் சுமார் 40 இராணுவ வீரர்கள் பலியாகியமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: