உலகக் கிண்ண தொடர் குறித்து எந்தவொரு பதற்றமும் கிடையாது – இந்திய கிரிக்கட் அணித் தலைவர் ரோஹித் சர்மா தெரிவிப்பு!

உலகக் கிண்ண தொடர் குறித்து எந்தவொரு பதற்றமும் தமக்கு இல்லை என இந்திய கிரிக்கட் அணித் தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி உலகக் கிண்ண தொடர் இந்தியாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், வெளிப்புற காரணிகள் குறித்து தான் கவலைப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தொடர், இந்தியாவில் நடைபெறுவதால் கூடுதல் அழுத்தம் எதுவுமில்லை. நிதானமாக இருப்பதும் எதிர்பார்ப்புகளை எப்படி சமாளிக்கிறேன் என்பதும் தான் எனக்கு முக்கியம் என ரோஹித் சர்மா குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பான ஒரு அணித் இந்த தொடருக்கு தேர்வு செய்யப்படும். அணியில் இடம்பெறாத வீரர்களிடம் தான் தனிப்பட்ட முறையில் விளக்கமளிப்பேன்.
உலகக் கிண்ண அணியில் இடம்பெற முடியாவிட்டால் ஒரு வீரர் மன ரீதியான தாக்கங்களுக்கு எவ்வாறு முகங்கொடுப்பார் என்பதை தாம் அறிந்திருப்பதாகவும் இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|