உலகக் கிண்ண கிரிக்கெற்: தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு – ஐ.சி.சி.!

Saturday, March 28th, 2020

2021 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு – 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

8 ஆவது இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரானது அடுத்த வருடம் இந்தியாவில் இடம்பெறவுள்ளதுடன், இந்த போட்டியிலும் 16 அணிகள் களம் இறங்குகின்றன. இவற்றில் 4 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.

குறித்த இந்த தகுதி சுற்றின் ஒரு பகுதி போட்டிகள் அடுத்த மாதம் முதல் ஜூன் வரை நடைபெறவிருந்தது.

எனினும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் நிறுவனம் அறிவித்தது.

Related posts: