உலகக் கிண்ண கிரிக்கட் தொடருக்கு முழுமையான பாதுகாப்பு – சர்வதேச கிரிக்கட் பேரவை!

Monday, March 18th, 2019

நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கட் தொடருக்கான பாதுகாப்பு பணிகள் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதான நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிட்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

நியுசிலாந்தில் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பங்களாதேஸ் கிரிக்கட் அணி நூலிழையில் தப்பியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் பாதுகாப்பு தொடர்பில் கரிசனை வெளியிடப்பட்டுவருகிறது.

எனினும் முழுமையான பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கட் சபையின் பாதுகாப்புத் துறை பணிப்பாளர், பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.