உலகக் கிண்ண கால்ப்பந்தில் கோல் மழை பொழிந்தது இங்கிலாந்து!

Monday, June 25th, 2018

2018 பீபா உலக கிண்ண கால் பந்தாட்டத் தொடரின் குழு ஜீ யில் இங்கிலாந்து மற்றும் பனாமா அணிகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 6:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

அதேபோல் குழு எச் சில் ஜப்பான் மற்றும் செனகல் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில், இரு அணிகளும் தலா இரண்டு கோல்களை பெற்றுக்கொள்ள போட்டி சமநிலையில் நிறைவு பெற்றது.

போலாந்து மற்றும் கொலம்பியா ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொலம்பியா அணி 3 :0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

இதனிடையே இன்றைய தினம் மேலும் நான்கு போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இதற்கமைய குழு ஏ யில் சவுதி அரேபியாவுக்கும் எகிப்துக்கும் இடையிலான போட்டியும், உருகுவே மற்றும் ரஸ்யா அணிகளுக்கு இடையிலான போட்டியும் இடம்பெறவுள்ளன.
அதேபோல் குழு பி யில் இடம்பெற்றுள்ள ஈரான் மற்றும் போர்த்துக்கல் அணிகளுக்கு இடையிலான போட்டியும், ஸ்பெயின் மற்றும் மொராக்கோ ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியும் இடம்பெறவுள்ளன.

Related posts: