உலகக் கிண்ண கால்பந்து – அரையிறுதிக்குள் ஆர்ஜன்டினா, குரேஷியா – நெதர்லாந்து, பிரேசில் வெளியேற்றம்!
Saturday, December 10th, 2022உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ஆர்ஜெண்டினா அணி, 4-3 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அரை இறுதிக்குள் பிரவேசித்தது.
ஆட்டமுடிவின் போது இரண்டு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலை கோல்களை பெற்றிருந்தநிலையில், முடிவை அறிய தண்ட உதை (பெனால்ட்டி) அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்போது, ஆர்ஜன்டீனா தனது முதல் 4 வாய்ப்புகளையும் கோலாக்கியது. அதே சமயம் நெதர்லாந்து 4 வாய்ப்புகளில் 1-ஐ தவறவிட்டது. இதனடிப்படையில் ஆர்ஜெண்டினா அரை இறுதிக்குள் பிரவேசித்தது.
இதேவேளை, மற்றுமொரு போட்டியில் தர வரிசையில் 12 வது இடத்தில் இருக்கும் குரேஷியா, தர வரிசையில் முதல் இடத்தில் உள்ள பிரேசிலை தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது.
இரண்டு அணிகளும் ஆட்ட முடிவில் கோல்கள் எதனையும் பெற்றிருக்காத நிலையில், தண்டனை உதை வாய்ப்பின் போது குரேஷியா 4 க்கு 2 என்ற அடிப்படையில் பிரேசிலை வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
|
|