உலகக் கிண்ணம் வரை சுமதிபாலவே தலைவர்!

2019ஆம் ஆண்டுவரை இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக நானே இருப்பேன். அதில் எந்த மாற் றமும் இல்லைஎன்று சுமதிபால தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி 0:3 என்ற அடிப் படையில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. இதனால் இலங்கை அணி மீதும் இலங்கை கிரிக்கெட் சபை மீதும் ஏகப்பட்ட குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ரணதுங்க, ‘‘இந்தத் தோல்வியில் எந்த ஒரு வீரருக்கும் பங்கில்லை.
கிரிக்கெட் சபையின் நிர்வாகத்தின் பொறுப்பேற்று தத்தமது பதவியில் இருந்து விலக வேண்டும்’’ என்று தெரிவித்தார். இதையடுத்து நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே சுமதிபால இவ்வாறு தெரிவித்தார்.
‘‘இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக அடைந்து வரும் மோசமான தோல்விகளுக்காக நான் பதவி விலகுவதற்கான எந்த எண்ணமும் இல்லை. எக்காரணம் கொண்டும் எனது பொறுப்புகளிலிருந்தும் இலங்கை கிரிக்கெட் சபையில் இருந்தும் 2019ஆம் ஆண்டு உலகக்கிண்ணம்வரை விலகமாட்டேன்’’ என சுமதிபால மேலும் தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் சபைக்கான தேர்தலில் ரணதுங்கவும் போட்டியிட்டார். அதில் அவர் தோல்வியடைந்தார். இதனாலேயே அவர் இலங்கை கிரிக்கெட் சபையின் மீதும், இலங்கை அணியின் வீரர்கள் மீதும் தொடர்ந்து விமர்சனங் களை முன்வைத்து வருகிறார் என் றும் கருத்துக்கள் உள்ளன.
Related posts:
|
|