உலகக் கிண்ணம்: முதல் போட்டியில் இலங்கை அணி!

Tuesday, November 5th, 2019

 2020 ஆம் ஆண்டு சர்வதேச இருபதுக்கு ௲ 20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி அயர்லாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ளது.

இந்த உலகக் கிணணத் தொடரில் மொத்தம் 16 அணிகள் கலந்துகொள்ளவுள்ளன. இதில் ஐ.சி.சி.இருபதுக்கு ௲ 20 போட்டிகள் தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ள பாகிஸ்தான், இந்தியா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள், ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.

இந் நிலையில் தகுதிச் சுற்றின் மூலம் மீதமுள்ள 6 அணிகளை தெரிவுசெய்வதற்கான போட்டிகள் ஐக்கிய அரபு எமீரகத்தில் நடைபெற்று வந்தது.

14 அணிகள் கலந்துகொண்ட இந்த தகுதிச் சுற்றின் இறுதியில் அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து, ஓமான், பபுவா நியூகினியா மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகள் 2020 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பினை உறுதி செய்தன.

இந் நிலையில் 2020 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் குழு ஏ யில் உள்ளடக்கப்பட்டுள்ள இலங்கை அணியும் அயர்லாந்து அணியும் மோதுகின்றன.

அதன்படி இப் போட்டியானது ஒக்டோபர் 18 ஆம் திகதி ‘Kardinia Park’ மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

Related posts: