உலகக் கிண்ணம்: இன்று இங்கிலாந்துடன் மோதுகின்றது மேற்கிந்திய தீவுகள் !
Friday, June 14th, 2019உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் 19வது லீக் போட்டி இன்று நடைபெறவுள்ளது. மேற்கிந்திய தீவுகளும் இங்கிலாந்தும் இன்றைய போட்டியில் மோதுகின்றன.
நேற்று இடம்பெறவிருந்த இந்திய – நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தது.
இந்த தொடரில் மழையால் பாதிக்கப்பட்ட நான்காவது போட்டி இதுவாகும். இதன் காரணமாக இந்தியாவிற்கும் நியுசிலாந்துக்கும் தலா ஒவ்வொரு புள்ளி வீதம் வழங்கப்பட்டது.
தொடரின் புள்ளிகள் பட்டியலில் நியுசிலாந்து அணி 7 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
அவுஸ்திரேலியா 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இந்தியா 5 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளன. இங்கிலாந்து 4 புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தில் இருக்கிறது.
இலங்கை அணியும் 4 புள்ளிகளையே பெற்றுள்ள போதும், ஓட்ட விகிதாசார புள்ளிகள் குறைவால் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஸ், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
Related posts:
|
|