உலகக் கிண்ணத் தொடர்: மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய இலங்கை !

Saturday, June 8th, 2019

பிரித்தானியாவில் நடைபெற்றுவரும் 12 ஆவது உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் புள்ளிப் பட்டியலில் 7 ஆவது இடத்திலிருந்த இலங்கை அணி, மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

உலகக் கிண்ணத் தொடரில் நேற்று இடம்பெறவிருந்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதையடுத்து இரண்டு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வீதம் வழங்கப்பட்டுள்ளன.

இதற்மைய புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி 3 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதேநேரம் 2 புள்ளிகளுடன் 8 ஆம் இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி 3 புள்ளிகளுடன் 4 ஆம் இடத்திற்கும் முன்னேறியுள்ளது.

இதேவேளை, உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் 12 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று பிற்பகல் 3.00 மணிக்கு கார்டிப்பில் இடம்பெறவுள்ளது.

Related posts: