உலகக் கிண்ணத் தொடர்: இங்கிலாந்து வெற்றி!
Wednesday, June 19th, 2019ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து 150 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 24-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது.
நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 397 ஓட்டங்கள் குவித்துள்ளது.
அதன்பின், 398 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது.
இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 247 ஓட்டங்களை எடுத்ததையடுத்து, இங்கிலாந்து அணி 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Related posts:
தம்மிக்க பிரசாத்திற்கு அவுஸ்திரேலியாவில் சத்திரசிகிச்சை!
அலி, ஸ்டோக்ஸ் சதம்: முன்னிலையில் இங்கிலாந்து!
அசேல குணரட்ன தொடர்பில் குருசிங்க!
|
|