உலகக் கிண்ணத் தொடர் – ஆஸிக்கு எதிராக பங்களாதேஷ் அணி இன்று களமிறங்குகிறது!

Thursday, June 20th, 2019

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நாட்டிங்காமில் இன்று (20) நடைபெறவுள்ள 26-வது போட்டியில் 05 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, பங்களாதேஷ் அணியினை எதிர்கொள்ளவுள்ளது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி அதில் 4-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது. பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் மூன்றிலும் வலுமிக்கதாக விளங்கும் ஆஸ்திரேலிய அணி தனது ஆதிக்கத்தை நீட்டிப்பதில் முனைப்பு காட்டி வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

பங்களாதேஷ் அணி 5 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 5 புள்ளி பெற்றுள்ளது.

இதில் தென்ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு அதிர்ச்சி அளித்து வியப்பூட்டிய பங்களாதேஷ் அணி, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கும் சவாலை ஏற்படுத்தும் என நம்பிக்கையுடன் வியூகங்களை வகுத்துள்ளதாக நம்பப்படுகிறது.

Related posts: